இந்தி நடிகர் சாகில் கான் மீது வழக்குப்பதிவு


இந்தி நடிகர் சாகில் கான் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

பெண்ணை மிரட்டியதாக இந்தி நடிகர் சாகில் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை ஒஷிவாரா பகுதியை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் ஜிம் செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஜிம்மில் பணம் தொடர்பாக அந்த பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஜிம் சென்றிருந்த இந்தி நடிகர் சாகில் கான் 43 வயது பெண்ணை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகரும், பெண்ணும் சேர்ந்து 43 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். பெண் அளித்த புகாரின் போில் போலீசார் நடிகர் சாகில் கான் மீது அவதூறு, மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நடிகர் சாகில் கான் 'ஸ்டைல்', 'அலாதீன் அன்ட் ராமா' உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

1 More update

Next Story