மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:46 PM GMT)

பிப்பர்ஜாய் புயலால் அடுத்த 5 நாட்களுக்கு மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மும்பை,

பிப்பர்ஜாய் புயலால் அடுத்த 5 நாட்களுக்கு மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

பிப்பர்ஜாய் புயல்

தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் நிலவி வருகிறது. இந்தநிலையில் அதற்கான சாத்தியகூறுகள் தற்போது நெருங்கி வருகிறது. அரபிக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாகி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு பிப்பர்ஜாய் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த புயல் மெதுவாக தரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் வருகிற 5 நாட்களுக்கு மராட்டியம், கோவா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வார இறுதியில் பலத்த மழை

மும்பையை பொறுத்தவரையில் வார இறுதியில் பலத்த மழையை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதைத்தவிர கொங்கன் பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும். தற்போது புயல் கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும்.

இதன் காரணமாக அரபிக்கடலில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீ. முதல் 155 கி.மீ வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் கரையை கடந்த பிறகு தென்மேற்கு பருவமழை வருகிற 12-ந் தேதி பிறகு தான் தொடங்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.


Next Story