வியாபாரியை மிரட்டி ரூ.35 லட்சம் பறிக்க முயன்ற சோட்டா சகீல் கூட்டாளி கைது

வியாபாரியை மிரட்டி ரூ.35 லட்சம் பறிக்க முயன்ற சோட்டாசகீல் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வியாபாரியை மிரட்டி ரூ.35 லட்சம் பறிக்க முயன்ற சோட்டாசகீல் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
மும்பையில் பேக்கரி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவருக்கு கடந்த 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர்ச்சியாக செல்போனில் அழைப்புகள் வந்தன. இதில் பேசிய ஆசாமி நிழலுழக தாதா சோட்டா சகீலின் கூட்டாளி என கூறி ரூ.35 லட்சம் தருமாறு மிரட்டினார். இறுதியாக 19-ந்தேதிக்குள் பணம் தராவிட்டால் சுட்டு கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்துபோன வியாபாரி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரிடம் சிக்கினார்
அவரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் திட்டம் போட்டனர். மிரட்டல் விடுத்த ஆசாமியை தொடர்பு கொண்டு பணம் பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.
இதன்பேரில் அங்கு வந்த நபரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அந்த ஆசாமி ஓஷிவாராவை சேர்ந்த பில்லே (வயது25) எனவும், சோட்டா சகீல் கூட்டாளி எனவும் தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






