கொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - பெண்கள் ஆணைய தலைவர் தகவல்


கொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - பெண்கள் ஆணைய தலைவர் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2023 7:45 PM GMT (Updated: 29 Aug 2023 7:45 PM GMT)

மராட்டியத்தில் கொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளதாக மாநில பெண்கள் நல ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளதாக மாநில பெண்கள் நல ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் லாத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளது. லாத்தூரில் மட்டும் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதை தடுக்க கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். குழந்தை திருமணத்துக்கு பத்திரிகை அச்சிடும் அச்சகங்கள் முதல் சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். செல்போன் போன்ற தகவல் தொழில்நுட்பத்தால் பெற்றோர், பிள்ளைகள் இடையே இடைவெளி அதிகரித்து உள்ளது. இதனால் சிறுமிகள் காதலில் விழுந்து வீட்டைவிட்டு செல்கின்றனர். போலீசாரின் 'தாமினி படையினர்' சிறுமிகளுடன் அதிகம் பேசி அவர்களை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story