குண்டும், குழியுமான சாலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய கலெக்டர் உத்தரவு


குண்டும், குழியுமான சாலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய கலெக்டர் உத்தரவு
x

தானே மாவட்டத்தில் குண்டும், குழியுமான சாலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தானே,

தானே மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வெறும் 30 சதவீதம் மட்டும் மழை பெய்து இருந்தது. இந்த மாதத்தில் 198 சதவீதம் அளவிற்கு மழை பெய்து உள்ளது. இதனால் தானே மாவட்டத்தில் அநேக இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேக்கிடம் அறிவுறுத்தினார்.

இதன்படி கலெக்டர் தலைமையில் கடந்த 15-ந்தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் நிறைவில், கனமழை சேதத்தால் போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்கள் நிவாரணம் பெறும் வகையில் தெருக்கள், சாலைகளில் ஏற்பட்டுள்ள குண்டும், குழியுமான சாலகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story