2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கியாஸ் சிலிண்டர் விலை 2 மடங்கு உயர்ந்து இருக்கிறது; உத்தவ் சிவசேனா கூறுகிறது


2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  கியாஸ் சிலிண்டர் விலை 2 மடங்கு உயர்ந்து இருக்கிறது; உத்தவ் சிவசேனா கூறுகிறது
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:46 PM GMT)

2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 மடங்கு அதிகமாக உள்ளது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 மடங்கு அதிகமாக உள்ளது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.

2 மடங்கு அதிகம்

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. தற்போது டெல்லியில் 14.2 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ.1,103 ஆக உள்ளது. இது கடந்த 2020 ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2 மடங்கு அதிகமாகும்.

சீனா முன்...

நாட்டில் தற்போது நிலவும் அச்சத்தை போக்க இந்தியா கூட்டணி உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா முன் மண்டியிட்ட இன்றைய இந்தியாவை வெற்றிபெற செய்ய இந்தியா கூட்டணி தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story