பாதுகாப்பு விஷயத்தில் ராகுல் காந்தி குடும்பத்தை குறிவைக்க வேண்டாம்- காங்கிரஸ் தலைவர் நானா படோலே சொல்கிறார்


பாதுகாப்பு விஷயத்தில் ராகுல் காந்தி குடும்பத்தை குறிவைக்க வேண்டாம்- காங்கிரஸ் தலைவர் நானா படோலே சொல்கிறார்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு விஷயத்தில் ராகுல் காந்தி குடும்பத்தை குறிவைக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

மும்பை,

பாதுகாப்பு விஷயத்தில் ராகுல் காந்தி குடும்பத்தை குறிவைக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

காங்கிரஸ் கடிதம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அப்போது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக கூறி காங்கிரஸ் தரப்பில் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் அணிவகுப்பில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் அரசு தரப்பில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு செய்யப்படவில்லை. ராகுல் காந்தி தான் பலமுறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளார். அப்போது இதுகுறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் நேற்று இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது:-

பிரதமருக்கு பாதுகாப்பு....

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு அரசு தரப்பு அவர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகவும் மற்றும் மக்களை சந்திப்பதாகவும் கூறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு நெறிமுறையை பின்பற்றுகிறாரா? என்று நாங்கள் மத்திய அரசையும், பா. ஜனதாவையும் கேட்க விரும்புகிறோம். குஜராத் தேர்தல் மற்றும் நாட்டின் பிற இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களின் போது, பிரதமர் மோடி பாதுகாப்பை மீறி மக்களை சந்திக்கிறார். எனவே இதை கருத்தில் கொண்டு அவர்கள் பிரதமரின் பாதுகாப்பை குறைப்பார்களா?

பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து காந்தி குடும்பத்தை பல்வேறு விஷயங்களில் குறிவைத்து வேலை செய்கிறது. ஆனால் காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு விஷயத்தில் அவர்களை குறிவைக்க வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story