புனே-மும்பை நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதல்; கண்டக்டர் பலி


புனே-மும்பை நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதல்; கண்டக்டர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2023 1:15 AM IST (Updated: 1 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

புனே-மும்பை நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் பலியானார்

மும்பை,

புனே-மும்பை நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. உமர்கா-தானே இடையே வந்த போது மூதாட்டி ஒருவர் இறங்க முயன்றார். இதனால் பஸ்சில் இருந்த கண்டக்டர் மூதாட்டி கீழே இறங்குவதற்கு உதவி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று பஸ்சின் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய கண்டக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் பிரதிப் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த ரசாயானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான கண்டக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story