'கொரோனா வைரஸ் இயற்கை அல்ல, சில நாடுகள் செய்த சதி'- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குற்றச்சாட்டு


கொரோனா வைரஸ் இயற்கை அல்ல, சில நாடுகள் செய்த சதி- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, அது சில நாடுகள் செய்த சதி என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

மும்பை,

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, அது சில நாடுகள் செய்த சதி என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

அகோலாவில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு ஒன்றில் வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது:-

சில நாடுகளின் சதி

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்திலேயே, கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்று நான் கூறினேன். சில நாடுகள் மற்றும் சில மனிதர்கள் செய்த சதி தான் என்றும் கூறினேன். இது கிருமியை பரப்பி செய்யப்பட்ட போர்.

அதேநேரத்தில் இந்த கருத்தை எனது சீடர்கள் கூட பொதுவெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில் இது சர்ச்சையை ஏற்படுத்தும்.

யோகா, ஆயுர்வேதா

கொரோனா தடுப்பூசி மருந்து எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்று பெரிய நாடுகள் கூட தற்போது கூறுகின்றன. இது தொடர்பாக நான் முன்பு கூறியது இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நிச்சயம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story