குர்லா பகுதியில் குடிநீர் வினியோகம் துண்டிப்பு

மும்பை,
மும்பை குர்லா கைராணி ரோடு பகுதியில் வருகிற 5-ந் தேதி முதல் மே மாதம் 6-ந் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமை குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மும்பை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக வரும் 5-ந் தேதி முதல் மே 6 வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கைராணி ரோடு பகுதியில் குடிநீர் வனியோகம் துண்டிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் காரணமாக கைராணி ரோட்டில் உள்ள சங்கார்ஷ்நகர், சுபாஷ் நகர், பானுசாலி வாடி, யாதவ் நகர், துர்க்கா மாதா மந்திர், குல்கர்னி வாடி, டிசோசா காம்பவுண்டு, லெட்சுமி நாராயண் மார்க், ஜோஸ் நகர், ஆசாத் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மே 6-ந் தேதி வரை சனிக்கிழமை தோறும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.
Next Story






