சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல் மீட்பு

வசாய்,
தானே மாவட்டம் பயந்தர் உத்தன் கடற்கரையில் நேற்று காலை சூட்கேஸ் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் மிராபயந்தர்-வசாய்விரார் போலீசார் கடற்கரைக்கு சென்று சூட்கேசை கைப்பற்றினர். அதனை திறந்து பார்த்த போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 25 வயதுடைய பெண்ணின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணின் வலது கையில் மதரீதியான பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து உடலை் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணின் தலை எங்கு வீசப்பட்டுள்ளது, அவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் காணாமல் போனவர்கள் குறித்து யாரேனும் புகார் அளித்து உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






