மராட்டிய மேல்-சபை தேர்தல்:- சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுப்போட ஜாமீன் மறுப்பு


மராட்டிய மேல்-சபை தேர்தல்:- சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுப்போட ஜாமீன் மறுப்பு
x

மராட்டிய மேல்-சபை தேர்தலில் சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுப்போட ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் காலியாக உள்ள 10 மேல்-சபை உறுப்பினர்களுக்கான (எம்.எல்.சி) தேர்தல் இன்று நடந்தது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர். இதற்கிடையே அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான மந்திரி நவாப் மாலிக், முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஆகியோர் தாங்கள் ஜனநாயக கடமையாற்ற ஒருநாள் தற்காலிக ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த 17-ந் தேதி மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சிறையில் இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்று ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதை எதிர்த்து அவர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை இன்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து, அவர்களுக்கு தற்காலிக ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

இருப்பினும், நீதிபதிகள் ரவிக்குமார் மற்றும் சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதை தடுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 62(5) தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டது.


Next Story