கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் ஆஸ்பத்திரியில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைவு- மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் ஆஸ்பத்திரியில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைவு- மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும் ஆஸ்பத்திரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைவு என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும் ஆஸ்பத்திரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைவு என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

அதிகரிக்கும் கொரோனா

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று புதிதாக 4 ஆயிரத்து 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய நாளை விட 36 சதவீதம் அதிகமாகும்.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள். தலைநகரில் மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 293 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல மாநிலத்தில் 2 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் தொற்று பாதிப்பு அதிகரிப்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

ஆஸ்பத்திரியில் சேர்க்கை

கொரோனா தொடர்ந்து அதிகரித்தபோதிலும், அது சில மாவட்டங்களோடு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மும்பை, தானே, புனே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் தான் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த போதிலும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படும் நோயாளிகள் சதவீதம் 2 முதல் 3 சதவீதமாக தான் உள்ளது. அதுமட்டும் இன்றி புதிய அச்சுறுத்தக்கூடிய கொரோனா மாறுபாடு மராட்டியத்தில் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் மும்பையில் கொரோனா நேர்மறை விகிதம் 40 சதவீதத்தை தொட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய் பரவுவதை தடுக்க 12 முதல் 18 வயதுக்கு உள்ளபட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். முன்னெச்சரிக்கையாக பரிசோதனை விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story