அரசு மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி- பட்னாவிஸ் கருத்து


அரசு மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி- பட்னாவிஸ் கருத்து
x

மக்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் அரசின் மீது அதிருப்தியில் தான் உள்ளனர் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மக்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் அரசின் மீது அதிருப்தியில் தான் உள்ளனர் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

மராட்டியத்தில் நடந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் பா.ஜனதா 3 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் முடிவில் இருந்து வரும் அறிகுறிகளை மகாவிகாஸ்அகாடி அரசு பார்க்க வேண்டும். மாநில மக்கள் மட்டும் அதிருப்தியில் இல்லை. ஆளும் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களே அதிருப்தியில் தான் உள்ளனர். தாங்கள் செயல்படும் விதத்தை மகாவிகாஸ் கூட்டணி சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

ரகசிய வாக்குப்பதிவு

வரும் 20-ந் தேதி மேல்-சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) 10 பேருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை தேர்தலில், எம்.எல்.ஏ.க்கள் கட்சி கொறடாவிடம் காண்பித்தபிறகு தான் வாக்கை பதிவு செய்தனர். அப்போது கூட ஆளுங்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால் எம்.எல்.சி. தேர்தலில் ரகசிய வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது என்ன நடக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மக்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story