சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான உதவித்தொகை இரட்டிப்பு


சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான உதவித்தொகை இரட்டிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2022 1:45 AM GMT (Updated: 29 Sep 2022 1:46 AM GMT)

உயர்கல்வி படிக்கும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை இரு மடங்காக உயர்ந்தப்பட்டு உள்ளது.

மும்பை,

உயர்கல்வி படிக்கும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை இரு மடங்காக உயர்ந்தப்பட்டு உள்ளது. மாநில மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு சிறுபான்மையினர் சமூதாயத்தை சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.

இதற்கு பின்பு இந்த உதவிதொகை உயர்த்தப்படவில்லை. இருப்பினும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோருக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில் மந்திரிசபையின் புதிய முடிவால் இந்த உதவிதொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

12-ம் வகுப்பு வரை கலை, அறிவியல், வணிகம் ஆகிய துறைகளில் கல்வி கற்கும் சிறுபான்மையினர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

6 வருவாய் கோட்டங்களில் உள்ள 56 நகரங்களில் முஸ்லிம்களின் சமூக, நிதி மற்றும் கல்வி நிலையை ஆய்வு குறித்த விரிவான அறிக்கை சமீபத்தில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு சிறுபான்மை சமூக மாணவர்களின் உதவிதொகை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story