சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளது- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த  சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளது- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2022 4:45 AM GMT (Updated: 2022-09-23T10:15:50+05:30)

சில ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புனே,

சில ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உலகில் முன்னணி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புனேயில் நடந்த பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் கட்சியினர் இடையே அவர் பேசியதாவது:-

கொரோனா ஊரடங்கின் போது ஒரு பட்டனை அழுத்தியதன் மூலம் பொது மக்களுக்கு அவர்களின் பணம் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்தது. வங்கி செல்ல முடியாதவர்கள், பணம் எடுக்க தெரியாதவர்களுக்காக கிராமங்களுக்கு மித்ரா வங்கி சேவை சென்றடைந்தது. இதேபோல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்ட போது அதுகுறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

அது கிராமப்புறம், ஊரகப்பகுதிகளை எப்படி சென்றடையும் என கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது கொரோனா காலத்திலும் கூட இந்தியா யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனையில் உலகில் முன்னணியில் உள்ளது.

சந்தேகம் தீர்ந்து உள்ளது

மோடி அரசு மக்கள், நமது தொழில்துறை, பெண்கள், குடும்பங்களை நம்பியது. சில ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பிரபலப்படுத்துவது சாத்தியமே இல்லாதது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரி கூறினார். ரூ.7-க்கு காய்கறி வாங்கி ஒருவர் எப்படி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவார் என கேட்டார். தற்போது அந்த சந்தேகம் தீர்க்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story