கோட்பந்தர் சாலையில் கன்டெய்னர் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி


கோட்பந்தர் சாலையில் கன்டெய்னர் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 15 July 2023 7:15 PM GMT (Updated: 15 July 2023 7:16 PM GMT)

தானே கோட்பந்தர் சாலையில் கன்டெய்னர் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

தானே,

தானே கோட்பந்தர் சாலையில் நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் ராஜஸ்தானில் இருந்து நவசேவா துறைமுகத்திற்கு 10 டன் துணிகளை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்றது. அதற்கு முன்னால் சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி 18 டன் சேலார் பேனல்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதன் காரணமாக டிரைவர் கேபின் உள்ளே சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று பலியான டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து காசர்வட்வலி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியான டிரைவர் மஜ்ஜித் கான் (வயது40) என்பது என தெரியவந்தது.


Next Story