ஆனந்த சதுர்த்தியையொட்டி அதிகாலை நேர மின்சார ரெயில்கள் இயக்கம்


ஆனந்த சதுர்த்தியையொட்டி அதிகாலை நேர மின்சார ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Sep 2023 7:45 PM GMT (Updated: 26 Sep 2023 7:45 PM GMT)

ஆனந்த சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது

மும்பை,

ஆனந்த சதுர்த்தியையொட்டி வருகிற 29-ந் தேதி அதிகாலை 10 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. சி.எஸ்.எம்.டி.யில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு கல்யாணுக்கும், அதிகாலை 2.30 மணிக்கு தானேக்கும், அதிகாலை 3.25 மணிக்கு கல்யாணுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல அதிகாலை 12.05 மணிக்கு கல்யாணில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும், அதிகாலை 1 மணி மற்றும் 2 மணிக்கு தானேயில் இருந்து சி.எஸ்.எம்.டிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பேலாப்பூருக்கு அதிகாலை 1.30, 2.45 மணிக்கும், பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு அதிகாலை 1.15, 2 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.


Next Story