லாத்தூரில் லேசான நிலநடுக்கம்


லாத்தூரில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:30 AM IST (Updated: 6 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் லாத்தூரில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சம்பாஜிநகர்,

லாத்தூர் மாவட்டம் ஹசோரி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த புவியியல் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் அந்த பகுதியில் சுமார் 7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், அது 1.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானதும் தெரியவந்தது. கடந்த 2-ந் தேதியும் இதே கிராமத்தில் 2.8 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

ஹசோரி கிராமத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story