கர்நாடக எல்லை பிரச்சினையில் ஏக்நாத் ஷிண்டே மவுனம் காத்து வருகிறார்- உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு


கர்நாடக எல்லை பிரச்சினையில் ஏக்நாத் ஷிண்டே மவுனம் காத்து வருகிறார்- உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கா்நாடக எல்லை பிரச்சினையில் ஏக்நாத் ஷிண்டே மவுனம் காத்து வருவதாக உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

கா்நாடக எல்லை பிரச்சினையில் ஏக்நாத் ஷிண்டே மவுனம் காத்து வருவதாக உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

குஜராத்துக்கு செல்லும் ஆலைகள்

புல்தானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மராட்டியத்தின் அக்கல்கோட், சோலாப்பூரை உரிமைகோருவாரோ என்ற அச்சம் எனக்கு உள்ளது. ஏனெனில் குஜராத்தில் தேர்தல் நடைபெறுவதால் மராட்டியத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அந்த மாநிலத்துக்கு செல்கிறது.

முதல்-மந்திரி மவுனம்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கா்நாடக எல்லை பிரச்சினையிலும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சத்ரபதி சிவாஜியை அவமதித்த விவகாரத்திலும் மவுனம் காத்து வருகிறார். விதர்பாவில் கடந்த சில மாதங்களில் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். நான் முதல்-மந்திரியாக இருந்து இருந்தால் இந்த சம்பவங்கள் நடந்து இருக்க விடமாட்டேன்.

மாநில அரசு விவசாயிகளின் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.களுக்கு பா.ஜனதா சார்பில் ஒருபோதும் போட்டியிட மாட்டோம் என்று கூற தைரியம் இருக்கிறதா?.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story