மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் மோதி தடம்புரண்டது- துறைமுக வழித்தடத்தில் சேவை பாதிப்பு


மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் மோதி தடம்புரண்டது- துறைமுக வழித்தடத்தில் சேவை பாதிப்பு
x

சி.எஸ்.எம்.டி.யில் மின்சார ரெயில் தடம் புரண்டதால் துறைமுக வழித்தடத்தில் சேவை பாதித்து பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மும்பை,

சி.எஸ்.எம்.டி.யில் மின்சார ரெயில் தடம் புரண்டதால் துறைமுக வழித்தடத்தில் சேவை பாதித்து பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரெயில் தடம் புரண்டது

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.39 மணிக்கு பன்வெல் நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது திடீரென பின்னோக்கி சென்ற மின்சார ரெயில் பிளாட்பாரத்தின் பின் பகுதி முனையில் மோதியது.

இதன் காரணமாக மின்சார ரெயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. மேலும் பிளாட்பாரத்தின் முனை பகுதியும் சேதமடைந்தது. தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் தடம்புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் அவதி

இதன் காரணமாக 1-வது பிளாட்பாரத்தில் இருந்து ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - பன்வெல், சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் இடையே ரெயில்கள் இயக்கப்பட்டன. எனினும் விபத்து காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் காலை நேரத்தில் மும்பை நோக்கி வேலைக்கு வந்த துறைமுக வழித்தட பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பயணிகளின் வசதிக்காக வடலா - சி.எஸ்.எம்.டி. இடையே 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல ரெயில் தடம்புரண்ட விபத்தில் யாரும் காயமடையவில்லை என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். இந்தநிலையில் மதியம் 12.11 மணியளவில் மீட்பு பணிகள் முடிந்து சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

1 More update

Next Story