மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகாலிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஐம்போ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வந்து உள்ள குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை நேற்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகாலிடம் விசாரணை நடத்தியது.
மும்பை,
ஐம்போ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வந்து உள்ள குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை நேற்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகாலிடம் விசாரணை நடத்தியது.
ஜம்போ சிகிச்சை மைய முறைகேடு
கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி சார்பில் ஜம்போ சிகிச்சை மையங்களில் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் ஜம்போ சிகிச்சை மையம் அமைத்த நிறுவனம் மற்றும் சிலர் மீது போலி ஆவணங்கள் கொடுத்து டெண்டர் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை மும்பை மாநகராட்சி கமிஷனா் இக்பால் சகாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
இக்பால் சகாலிடம் விசாரணை
இந்தநிலையில் நேற்று அவர் மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவர் கொரோனா ஜம்போ சிகிச்சை மையம் அமைக்க விடப்பட்ட டெண்டர் தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு காலை 11.40 மணியளவில் இக்பால் சகால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
ஐம்போ சிகிச்சை மைய முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை மாநகராட்சி கமிஷனரிடம் விசாரணை நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






