பிரபல கணிதவியலாளர் மங்களா நர்லிகர் மரணம்

புகழ்பெற்ற கணிதவியலாளரும், விஞ்ஞானியுமாக இருந்தவர் மங்களா நர்லிகர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார்.
புனே,
புகழ்பெற்ற கணிதவியலாளரும், விஞ்ஞானியுமாக இருந்தவர் மங்களா நர்லிகர். இவரது கணவர் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானி டாக்டர் ஜெயந்த் நர்லிகர் ஆவார். 90 வயதான மங்களா நர்லிகர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி வந்தார். இந்தநிலையில் உடல்நிலை மிகவும் மோசமான அவர் நேற்று காலமானார். இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் இருந்து இந்தியாவுக்கு கணவருடன் குடிபெயர்ந்த அவர், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார். மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதம் கற்பித்து வந்தார். 1989-ம் ஆண்டு தம்பதியினர் புனேவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர் சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையில் பணியாற்றினார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். மங்களா நர்லிகர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும். பின்னர் வைகுந்த் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






