பிரசவத்தில் பெண் பலி; டாக்டர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
பிரசவத்தில் பெண் பலியானார். டாக்டர்களின் அலட்சியத்தாலே பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டினர்
வசாய்,
பால்கர் மாவட்டம் சட்பாதி பகுதியை சேர்ந்தவர் கிஷோர். தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி (வயது36). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 19-ந் தேதி பிரசவத்திற்காக பால்கர் ஊரக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இரவு 10.30 மணி அளவில் ஆபரேஷன் மூலம் குழந்தை பிரவசம் ஆனது. அப்போது தாயும், பிறந்த குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் கல்யாணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் நலம் மோசமடைந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடனடி சிகிச்சை கிடைக்காமல் இருந்ததாக தெரிகிறது. சில மணி நேரத்தில் கல்யாணி உயிரிழந்தார். தகவல் அறிந்த பால்கர் ஊரக ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி கெய்க்வாட் அங்கு வந்து விசாரணை நடத்தினார். டாக்டர்கள் ஆபரேஷனை அலட்சியமாக செய்ததால் ரத்தப்போக்கு ஏற்பட்டு கல்யாணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.