பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தானே,
திவா பெடவாடே கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண்ணின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியிடம் சிறு பிரச்சினைகளுக்காக கூட அடிக்கடி வாக்குவாதம் செய்து தாக்கி மனரீதியாக சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் நேற்று தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த மும்ரா போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் சகோதரர் போலீசில் அளித்த புகாரில், கணவரின் கொடுமை தாங்காமல் தனது சகோதரி தற்கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார். இதன்படி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக அப்பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






