24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு- மாநகராட்சி அறிவிப்பு

24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு- மாநகராட்சி அறிவிப்பு
x

வருகிற 1-ந் தேதி முதல் 24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

வருகிற 1-ந் தேதி முதல் 24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

யோகா பயிற்சி வகுப்பு

இது தொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த யோகா வகுப்புகள் ஒவ்வொன்றும் 30 நபர்கள் மிகாமல் இருக்க வேண்டும். யோகா வகுப்பில் கலந்து கொள்ளும் விருப்பமுடையவர்கள் உள்ளூர் வார்டு அலுவலகத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் திறந்த வெளிகள், மாநகராட்சி பள்ளிகள், திருமண மண்டபங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வாரத்தின் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

பயிற்சியாளர்கள்

இந்த வகுப்புகளில் யோகா பயிற்சி அளிக்க தேவையான பயிற்சியாளர்களை மாநகராட்சி நியமனம் செய்யும். மும்பை மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 200 சிவ் யோகா கேந்திரா செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

-------

Next Story