குஜராத் நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு: மும்பை- ஆமதாபாத் இடையே ரெயில் போக்குவரத்து பாதிப்பு - பயணிகள் பரிதவிப்பு


குஜராத் நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு: மும்பை- ஆமதாபாத் இடையே ரெயில் போக்குவரத்து பாதிப்பு - பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 18 Sep 2023 7:45 PM GMT (Updated: 18 Sep 2023 7:45 PM GMT)

குஜராத் நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மும்பை- ஆமதாபாத் இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பரிதவித்தனர்.

மும்பை,

குஜராத் நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மும்பை- ஆமதாபாத் இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பரிதவித்தனர்.

கனமழை

குஜராத்தின் பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நர்மதா மற்றும் பிற ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள பருச் மற்றும் அங்கலேஷ்வர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நர்மதா நதியில் அபாயகட்டத்திற்கு மேல் வெள்ளம் ஓடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை- ஆமதாபாத் வழித்தடத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த வழித்தடத்தின் இரு பக்கங்களிலும் பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் ரெயிலுக்குள் பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, பரிதவித்து வருகின்றனர்.

18 ரெயில்கள் ரத்து

ரெயில்களில் சிக்கி தவித்த பயணிகளுக்கு ரெயில்வே மூலம் குளிர்பானம், தேநீர் மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில் பயணிக்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட குறைந்தது 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story