இந்தி நடிகர் ரசிக் தவே மரணம்


இந்தி நடிகர் ரசிக் தவே மரணம்
x

இந்தி நடிகர் ரசிக் தவே மரணம் அடைந்தார்.

மும்பை,

இந்தி மற்றும் குஜராத்தி படங்களில் நடித்தவர் ரசிக் தவே. 65 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதி அடைந்து வந்தார். இதனால் கடந்த 20 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் வைத்து அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணம் அடைந்த நடிகர் ரசிக் தவேக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

1 More update

Next Story