பயந்தரில் தாய், மகன் மர்மச்சாவு


பயந்தரில் தாய், மகன் மர்மச்சாவு
x
தினத்தந்தி 16 July 2023 1:15 AM IST (Updated: 16 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம் பயந்தரில் தாய் மற்றும் மகன் மர்மமான முறையில் இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானே,

தானே மாவட்டம் பயந்தர் முர்டே பகுதியை சேர்ந்தவர் கவிதா சவான். இவர் தனது கணவர் மற்றும் மகன் ரோகித் (வயது8) கணவரின் சகோதரர் ஷியாம் ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் கவிதா சவானின் கணவர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அவர் வெகுநேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. எனவே அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கவிதா சவான், அவரது மகன் மற்றும் சகோதரர் ஷியாம் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டார். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுவன் ரோகித் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. கவிதா சவான் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். சகோதரர் ஷியாமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்று உணவுகளின் மாதிரியை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவர்கள் 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது இது கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story