நடப்பு ஆண்டில் மட்டும் ரெயில் பயணிகளிடம் திருடி வந்த 414 பேர் கைது- அதிகாரி தகவல்


நடப்பு ஆண்டில் மட்டும் ரெயில் பயணிகளிடம் திருடி வந்த 414 பேர் கைது- அதிகாரி தகவல்
x

மேற்கு ரெயில்வேயில் நடப்பு ஆண்டில் மட்டும் பயணிகளிடம் திருடி வந்த 414 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பை,

மேற்கு ரெயில்வேயில் நடப்பு ஆண்டில் மட்டும் பயணிகளிடம் திருடி வந்த 414 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருட்டில் ஈடுபட்டவர் கைது

மும்பை அந்தேரி ரெயில் நிலையத்தில் கடந்த 11-ந்தேதி பயணி ஒருவரின் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரம் அடங்கிய மணிபர்சு திருட்டு போனதாக ரெயில்வே போலீசில் புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தேகப்படும்படி ஒருவர் நடமாடி வந்ததை போலீசார் கண்டனர். அவரை பிடித்த போலீசார் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில், அவரது பெயர் இம்ரான் ஹாருன் எனவும், பயணியின் செல்போன், மணிபர்சை திருடியது இவர் தான் என்பது தெரியவந்தது.

414 பேர் சிக்கினர்

ஏற்கனவே இவர் மீது கொள்ளை, போதைப்பொருள் விற்பனை போன்ற 17 வழக்குகளில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி மேற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் கூறுகையில், ரெயில் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிய முக்கிய ரெயில் நிலையங்களில் சிறப்பு போலீஸ் படைகளை பணியில் நிறுத்தி உள்ளோம். நடப்பு ஆண்டில் மட்டும் இது வரையில் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடிய 387 பேரும், 27 கொள்ளையர்களும் என மொத்தம் 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.


Next Story