மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு


மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2023 12:30 AM IST (Updated: 15 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மேற்கு ரெயில்வே வழிதடத்தில் 15 பெட்டி கொண்ட மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுகிறது

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர்நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். கூட்ட நெரிசலை குறைக்க 12 பெட்டி மின்சார ரெயில்கள், 15 பெட்டி ரெயில்களாக மாற்றப்பட்டு வருகின்றன. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 1,394 சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவைகள் 150 இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கூடுதலாக 49, 15 பெட்டி மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மேற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் 15 பெட்டி ரெயில் சேவைகள் எண்ணிக்கை 199 ஆக அதிகரிக்க உள்ளது. புதிய 15 பெட்டி மின்சார ரெயில் சேவைகள் சர்ச்கேட்- விரார் இடையே இயக்கப்பட உள்ளது.-

1 More update

Next Story