25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; மனோஜ் ஜராங்கே அறிவிப்பு


25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2023 7:45 PM GMT (Updated: 22 Oct 2023 7:45 PM GMT)

25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்

மும்பை,

மராத்தா இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடிவரும் மராத்த சமூகத்தை சேர்ந்த தலைவர் மனோஜ் ஜராங்கே நேற்று ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும்வரை மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை மராத்தா சமூகத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். 24-ந் தேதிக்குள் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், 25-ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன். இந்த போராட்டங்கள் அமைதியாக நடக்கும் போர் போன்றது. இந்த உண்ணாவிரதத்தின்போது தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளை பெறுவதையும் தவிர்ப்பேன். 5 கோடி மராத்தா சமூகத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்க்ள. தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று சமூக மக்களை கேட்டுக்கொள்கிறேன். மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வுகளை தூண்ட மாநில அரசு முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story