உண்மை நமது அடித்தளம் என்பதால் குடும்ப அமைப்பு வீழ்ச்சியில் இருந்து பாரதம் தப்பித்து உள்ளது;


உண்மை நமது அடித்தளம் என்பதால் குடும்ப அமைப்பு வீழ்ச்சியில் இருந்து பாரதம் தப்பித்து உள்ளது;
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் குடும்ப அமைப்பு வீழ்ச்சியில் இருந்து பாரதம் தப்பித்து இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.

நாக்பூர்,

உலக அளவில் குடும்ப அமைப்பு வீழ்ச்சியில் இருந்து பாரதம் தப்பித்து இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.

நாக்பூரில் நடந்த மூத்த குடிமக்கள் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியதாவது:-

உண்மை நமது அடித்தளம்

உலக அளவில் குடும்ப அமைப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் பாரதம் அந்த வீழ்ச்சியில் இருந்து தப்பித்து உள்ளது. நமது பாரதத்தின் அடித்தளம் உண்மை என்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. நமது கலாசார வேர்களை பிடிங்கி எறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் கலாசாரத்தின் வேர்கள் உண்மை என்பதால் பாரதம் பாதுகாக்கப்படுகிறது.

ஒழுக்க கேடுகளுக்கு நல்ல பெயர்

உலக இன்பங்களையும், முயற்சிகளையும் தங்கள் சுயநல தத்துவங்கள் மூலம் பலர் நியாயப்படுத்துகிறார்கள். இந்த போக்கு வளர்ந்து வருகிறது. இது கலாசார மார்க்சியம் ஆகும். இவர்கள் இதுபோன்ற ஒழுக்க கேடுகளுக்கு நல்ல பெயரை கொடுத்து ஆதரிக்கிறார்கள். சமூகத்தில் இதுபோன்ற குழப்பங்கள் அவர்களுக்கு உதவுவதால் அவர்கள் இதை செய்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்கள். பல்வேறு தத்துவங்கள் மற்றும் சித்தாந்தங்களை பற்றி பேசி, நல்லதை அழிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story