மும்பையில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் கைது

மும்பை முல்லுண்ட் போலீஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை முல்லுண்ட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.25 லட்சம் லஞ்சம் தருமாறு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் கேட்டுள்ளனர். இது தொடர்பான பேரத்தில் ரூ.11 லட்சம் தருவதாக முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் தருவதாக அந்த நபர் தெரிவித்தார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனையின் பேரில் அந்த நபர் நேற்று முன்தினம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச பணத்தை வாங்கிய போலீஸ்காரர் மற்றும் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






