சிவசேனாவில் இணைந்த பாதையில் தான் பா.ஜனதாவிலும் இணைந்தோம் - சகன் புஜ்பால் பேச்சு


சிவசேனாவில் இணைந்த பாதையில் தான் பா.ஜனதாவிலும் இணைந்தோம் - சகன் புஜ்பால் பேச்சு
x
தினத்தந்தி 6 July 2023 1:30 AM IST (Updated: 6 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவில் இணைந்த பாதையில் தான் பா.ஜனதாவிலும் இணைந்து உள்ளோம் என்று மந்திரி சகன் புஜ்பால் பேசினார்.

மும்பை,

சிவசேனாவில் இணைந்த பாதையில் தான் பா.ஜனதாவிலும் இணைந்து உள்ளோம் என்று மந்திரி சகன் புஜ்பால் பேசினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 9 பேர் ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியில் இணைந்து இருப்பது, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நேற்று அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் பேசிய சகன் புஜ்பால் கூறியதாவது:-

குரு தட்சணை

மராட்டிய அரசில் இணைவது குறித்து முறையான பரிசீலனைக்கு பிறகே முடிவு செய்தோம். சரத்பவார் 58 ஆண்டு காலம் அரசியலில் இருந்துள்ளார். நானும் அதே துறையில் 56 ஆண்டுகளை கழித்துள்ளேன். எனவே ஒருநாள் காலையில் கண்விழித்து எழுந்தவுடன் அரசில் இணைய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. நாங்கள் சரத்பவாருக்கு குரு தட்சணை வழங்கி உள்ளோம். அவரது அண்ணன் மகனை மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக்கி இருக்கிறோம். முழு கட்சியையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்து இருக்கிறோம்.

அதிகாரம் தேவை

பாபாசாகேப் அம்பேத்கர் மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மக்கள் எப்படி நாங்கள் பா.ஜனதாவுடன் இணைந்தோம் என்று கேட்கின்றனர். நாங்கள் சிவசேனாவுடன் எப்படி இணைந்தோமோ அதே பாதையில் தான் தற்போது பா.ஜனதாவுடன் இணைந்துள்ளோம். இதில் எந்த புதுமையும் இல்லை. நிதிஷ்குமார், ஜெயலலிதா, நவீன் பட்நாயக், மெகபூபா முப்தி போன்றவர்கள் கூட பா.ஜனதாவுடன் இணைந்துவிட்டு, பின்னர் பிரிந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story