ரம்மி விளையாடிய தொழில் அதிபர்களுக்கு ஜெயில்


ரம்மி விளையாடிய தொழில் அதிபர்களுக்கு ஜெயில்
x

5 நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து ரம்மி விளையாடிய தொழில் அதிபர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையில் உள்ள தாஜ் பிரசிடன்ட் 5 நட்சத்திர ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சிலர் ஒரு அறையில் பணம் வைத்து ரம்மி விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அஸ்வின் பன்சாலி, சந்தீப் சால்கே, நரேஷ், சுரேஷ், கேத்தன் ஷா, ஷரவன், ரமேஷ், மனோஜ், ராஜ் பாட் ஆகிய 9 தொழில் அதிபர்களை கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த ரூ.3¼ லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் நடந்தது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 தொழில் அதிபர்களுக்கும் 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.


Next Story