கல்யாணில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை; காவலாளி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


கல்யாணில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை; காவலாளி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்யாணில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற காவலாளி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே,

கல்யாணில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற காவலாளி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் புகுந்து கொள்ளை

கல்யாண் சிக்கன்கர் பகுதியை சேர்ந்த ஒருவர் கர்பா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதன்பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த லாக்கரை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 35 லட்சத்து 88 ஆயிரம் ஆகும். இது பற்றி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கட்டிடத்தின் காவலாளி ககன் பகதூர் (வயது48), அவரது மனைவி சுமன் (46) மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் ஆகியோருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

4 பேருக்கு வலைவீச்சு

முதல் மாடியில் உள்ள வீட்டில் ஏணியை பயன்படுத்தி குளியல் அறை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், பின்னர் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து ரூ.35 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்தது. தலைமறைவாகி உள்ள 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட காவலாளியே திட்டம்போட்டு, மனைவியுடன் வீடுபுகுந்த கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story