லால்பாக் ராஜா கணபதிக்கு 5½ கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி காணிக்கை

லால்பாக் ராஜா கணபதிக்கு  5½ கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி காணிக்கை
x

மும்பையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் போது பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் 5½ கிலோ தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் போது பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் 5½ கிலோ தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

காணிக்கை

மும்பையில் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் சினிமா, அரசியல் தலைவர்கள், முகேஷ் அம்பானி போன்ற பெரிய தொழில் அதிபர்களும் லால்பாக் ராஜாவை தரிசித்தனர். மேலும் லால்பாக் ராஜாவுக்கு பக்தர்கள் அதிகளவில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களை காணிக்கையாக அளித்தனர்.

இதில் ரொக்கமாக ரூ.5 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேலும் சுமார் 5½ கிலோ தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி பொருட்கள் கிடைத்தன.

தங்கம், வெள்ளி ஏலம்

தங்கம், வெள்ளி பொருட்கள் நேற்றுமாலை ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் ஆர்வமாக லாக்பாக் விநாயகருக்கு காணிக்கையாக வந்த பொருட்களை ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக 1¼ கிலோ எடை கொண்ட ராட்சத மோதக் (கொழுக்கட்டை) ரூ.60.03 லட்சத்திற்கு ஏலம் போனது.

இதேபோல தங்க நெக்லஸ் ரூ.8.55 லட்சத்திற்கும், தங்க கட்டி ரூ.5.77 லட்சத்திற்கும் ஏலம் போனது. லால்பாக் ராஜாவுக்கு காணிக்கையாக வந்த மோட்டார் சைக்கிளை பக்தர் ஒருவர் ரூ.77 ஆயிரத்திற்கு வாங்கினார்.

1 More update

Next Story