கட்சியை உடைக்க செய்து, நாங்கள் சண்டையிடுவதை பா.ஜனதா தலைவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து ரசிக்கிறார்கள் - ரோகித் பவார் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


கட்சியை உடைக்க செய்து, நாங்கள் சண்டையிடுவதை பா.ஜனதா தலைவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து ரசிக்கிறார்கள் - ரோகித் பவார் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கட்சியை உடைக்க செய்து நாங்கள் சண்டையிடுவதை பா.ஜனதா தலைவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து ரசிக்கிறார்கள் என்று ரோகித்பவார் எம்.எல்.ஏ. கூறினார்.

புனே,

கட்சியை உடைக்க செய்து நாங்கள் சண்டையிடுவதை பா.ஜனதா தலைவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து ரசிக்கிறார்கள் என்று ரோகித்பவார் எம்.எல்.ஏ. கூறினார்.

உடைந்த கட்சி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் ஆளும் கூட்டணி அரசில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றுள்ளார். அதேபோல அவரது கட்சியை சேர்ந்த மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாகி உள்ளனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. இதுகுறித்து சரத்பவாரின் பேரனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் நேற்று கூறியதாவது:-

மிகப்பெரிய தந்திரம்

பா.ஜனதா ஒரு மிக பெரிய தந்திரத்தை செய்துள்ளது. பாலாசாகேப் பால் தாக்கரே மண்ணின் மைந்தர்கள் மற்றும் அவர்களின் அடையாளத்தை பாதுகாக்க சிவசேனாவை உருவாக்கினார். ஆனால் பா.ஜனதா அந்த கட்சியை உடைத்தது. தற்போது நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான சூழல் நிலவுகிறது. இதைபற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காகவும், அனைத்து எதிர்க்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்களை பரபரப்பாக வைத்திருக்கவும், பா.ஜனதா முதலில் சிவசேனாவை உடைத்ததை போன்று தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துள்ளது. நாங்கள் தற்போது ஒருவரை ஒருவர் எதிர்த்து பேசி, சண்டையிட்டு கொண்டு இருக்கிறோம். பா.ஜனதா தலைவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து, நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அஜித்பவார் மீது பழி

ஒரு குடும்பத்தை உடைத்தது யார், கட்சியை உடைத்தது யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அந்த உண்மையை அவர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள். பா.ஜனதா இரண்டு பெரிய கட்சிகளை உடைத்த விதத்தை மக்கள் விரும்பவில்லை. அஜித்பவாரை சுற்றியுள்ள நான்கு அல்லது ஐந்து தலைவர்கள் அவரை வில்லனை போல சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கான முழு பழியையும் அவர் மீது சுமத்துகின்றனர். நேற்று யோலாவில் சகன் புஜ்பால் நடத்திய பொதுக்கூட்ட பதாகைகளில் அஜித்பவாரின் படம் இடம்பெற வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story