அந்தேரியில் ரூ.1.57 கோடி போதைப்பொருளுடன் ஆசாமி கைது
அந்தேரி பகுதியில் ரூ.1.57 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் வந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் கடந்த 2-ந்தேதி குறிப்பிட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை போட்டனர். இதில் 5 கிலோ 250 கிராம் எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 57 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாமியை கைது செய்தனர். மேலும் இவருடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story