விலைவாசி உயர்வு, நன்கொடை பற்றாக்குறையால் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளாத மண்டல்


விலைவாசி உயர்வு, நன்கொடை பற்றாக்குறையால் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளாத மண்டல்
x

விலைவாசி உயர்வு, நன்கொடை பற்றாக்குறையால் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளாத மண்டல்

தானே,

மராட்டியத்தை பண்டிகை கொண்டாட்ட மாநிலம் என்று அழைத்தால் மிகையாகாது. ஆண்டுதோறும் அனைத்து பண்டிகைகளும் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும்.

மாநிலம் முழுவதும் மண்டல்கள்(விழா ஒருங்கிணைப்பு குழு) சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஆடல், பாடல் என மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இருப்பினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா கொண்டாட்டங்கள் தடைப்பட்டு இருந்தது. தற்போது நோயின் அச்சம் நீங்கியதை அடுத்து மாநிலம் மீண்டும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

குறிப்பாக நாளை மறுதினம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்குவதால் மண்டல்கள் நோக்கி விநாயகர் சிலைகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. கொரோனா தொற்று நோய் நிலைமை சீரானாலும் பொருளாதார பிரச்சினை இருப்பதை நவிமும்பை மண்டல் ஒன்று சுட்டி காண்பித்துள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யும் "டிரீம் காம்பிளக்ஸ் கணேஷ் உத்சவ் மண்டல்" இந்த ஆண்டு விநாயகர் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளது.

இது குறித்து போலீசாருக்கு மண்டல் சார்பில் எழுதிய கடிதத்தில், "அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், நன்கொடை பெறுவதில் தற்போது நிலவும் சிரமம் காரணமாகவும் திருவிழாவை இந்த முறை கொண்டாடவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story