நடிகை கேதகி சிதாலேக்கு ஜாமீன் மறுப்பு


நடிகை கேதகி சிதாலேக்கு ஜாமீன் மறுப்பு
x

சரத்பவார் பற்றி சர்ச்சை பதிவிட்ட நடிகை கேதகி சிதாலேக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு நிராகரித்து விட்டது.

மாவட்ட செய்திகள்

தானே,

சரத்பவார் பற்றி சர்ச்சை பதிவிட்ட நடிகை கேதகி சிதாலேக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு நிராகரித்து விட்டது.

சிறையில் அடைப்பு

மராத்தி நடிகை கேதகி சிதாலே சமீபத்தில் முகநூலில் சரத்பவார் குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்தார். 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்', 'நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது' என அதில் கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, கல்வா போலீசார் நடிகை கேதகி சிதாலேவை கடந்த 15-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் மீது அவதூறு பரப்புதல், மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 18-ந் தேதி அவரது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, கேதகி சிதாலேயை வரும் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் நிராகரிப்பு

இந்த நிலையில் நடிகை தனக்கு ஜாமீன் வழங்ககோரி தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு பி.எச். பார்மர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு நடிகையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். நடிகை செய்த குற்றம் கடுமையானது என்பதால் அவருக்கு எந்த விதத்திலும் நிவாரணம் வழங்க முடியாது என தெரிவித்தார்.


Next Story