மரத்வாடா சுதந்திர தின கொண்டாட்டம்: நிஜாம் ஆட்சிக்கு எதிராக 25 லட்சம் பேரீச்ச மரங்களை வெட்டிய தலித்துகள் - நினைவு கூர்ந்த சுதந்திர போராட்ட வீரர்


மரத்வாடா சுதந்திர தின கொண்டாட்டம்: நிஜாம் ஆட்சிக்கு எதிராக 25 லட்சம் பேரீச்ச மரங்களை வெட்டிய தலித்துகள் - நினைவு கூர்ந்த சுதந்திர போராட்ட வீரர்
x

நிஜாமீன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 25 லட்சம் பேரீச்ச மரங்களை தலித்துகள் வெட்டிய சம்பவத்தை சுதந்திர போராட்ட வீரர் நினைவு கூர்ந்தார்.

மும்பை,

நிஜாமீன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 25 லட்சம் பேரீச்ச மரங்களை தலித்துகள் வெட்டிய சம்பவத்தை சுதந்திர போராட்ட வீரர் நினைவு கூர்ந்தார்.

நிஜாம் ஆட்சி

மத்திய மராட்டியத்தில் உள்ள மரத்வாடா முன்பு ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்தது.

இந்த நிலையில் கடும் போராட்டங்களுக்கு பின்னர் 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மரத்வாடா நிஜாம் ஆட்சியின் பிடியில் இருந்து விடுபட்டது. எனவே இந்த நாளை "மரத்வாடா முக்தி சங்க்ராம் தின்" என்ற பெயரில் மரத்வாடா சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றனர்.

விடுதலை நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் 94 வயதான சுதந்திர போராட்ட வீரர் பகவான்ராவ் தேஷ்பாண்டே, மரத்வாடா போராட்டத்தில் மக்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அம்பேத்கர் பேச்சு

1946-ம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், ஐதராபாத்தில் நடந்த ஐக்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த அட்டவணை சாதிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், "சுதந்திரம் என்பது தலித்துகளுக்கு சுவாசம் போன்றது, நிஜாம் சுந்திரத்திற்கு எதிரானவர், ஐதராபாத் மாநில காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடுவதால், தலித்துகள் அந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

அம்பேத்கரின் பேச்சால் தூண்டப்பட்ட ஐக்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு தலைவர் சுப்பையா, ஐதராபாத் சுதந்திர போராட்டத்தில் இணைந்தார்.

மிகப்பெரிய தியாகம்

நிஜாம் அரசு பேரீச்ச பழ விளைச்சல் மீதான வரி மூலம் அதிக வருமானம் பெற்று வந்தனர். எனவே அவர்களின் கருவூலத்தை சீர்குலைக்க ''ஜங்கில் சத்தியாகிரக போராட்டம் " ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி கிட்டத்தட்ட 25 லட்சம் பேரீச்ச பழ மரங்களை தலித்துகள் வெட்டினர். இது ஒரு மிகப்பெரிய தியாகம், ஏனெனில் தலித்துகள் பாரம்பரியமாக பேரீச்சம் பழங்களை விற்று வருமானம் ஈட்டிவந்தனர். ஆனால் அவர்கள் வருமானத்தை இழந்து நிஜாமின் போலீசாருக்கும், துணை ராணுவ படையினருக்கும் அஞ்சாமல் மரங்களை வெட்டினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story