மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கு: யூசுப் கான் ஜாமீன் மனு தள்ளுபடி - சிறப்பு கோர்ட்டு உத்தரவு


மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கு: யூசுப் கான் ஜாமீன் மனு தள்ளுபடி - சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 July 2023 12:45 AM IST (Updated: 18 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கில் யூசுப் கானின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

மும்பை,

மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கில் யூசுப் கானின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சிறப்பு கோர்ட்டில் மனு

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் பா.ஜனதா கட்சி நிபுர் சர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. இவருக்கு சமூக ஊடகம் வழியாக ஆதரவு தெரிவித்த அமராவதி மாவட்டத்தை சேர்ந்த மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கே என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த வழக்கில் கால்நடை டாக்டரான யூசுப் கான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை, குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்தநிலையில் கால்நடை டாக்டர் யூசுப் கான் ஜாமீன் கோரி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் கட்டாரியா, யூசுப் கானுக்கு ஜாமீன் மறுத்தார். இது குறித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

தலையை துண்டிக்க சதி

யூசுப் கான் தனக்கு மருந்துக் கடைக்காரர் அனுப்பிய தகவலை மற்ற வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு பரப்பி இருக்கிறார். விண்ணப்பதாரர் அப்படி செய்ததற்கு அவர் உமேஸ் கோலே மீதான வெறுப்பை பரப்புவதும், இதன் பின்விளைவுகளை அவருக்கு காட்டுவதும் தான் என தெரியவருகிறது. அதுமட்டும் இன்றி யூசுப் கான் மற்ற குற்றவாளிகளை அணுகி, உமேசின் தலையை துண்டிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. யூசுப் கான் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும்போது அதை முற்றிலும் நம்ப தகுந்தவை இல்லை என புறம்தள்ள முடியாது. முதல்கட்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் மூலம் நம்புவதற்கு தேவையான காரணங்கள் உள்ளது. எனவே அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அவரின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்கிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேல் முறையீடு

இந்தநிலையில் யூசுப் கானின் வக்கீல், "ஜாமீன் மனு மீதான ஆதாரங்களை சரியான முறையில் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. எனவே மும்பை ஐகோர்ட்டில் இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்படும்" என்றார். இந்த வழக்கில் யூசுப் கான் தவிர மேலும் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story