நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசுகையில் மோடி காங்கிரசை விமர்சித்தது, அந்த கட்சியின் வலுவான வளர்ச்சியை காட்டுகிறது; சஞ்சய் ராவத் கருத்து


நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசுகையில் மோடி காங்கிரசை விமர்சித்தது, அந்த கட்சியின் வலுவான வளர்ச்சியை காட்டுகிறது; சஞ்சய் ராவத் கருத்து
x
தினத்தந்தி 11 Aug 2023 7:45 PM GMT (Updated: 12 Aug 2023 10:34 AM GMT)

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசுகையில், மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தது அந்த கட்சியின் வலுவான வளர்ச்சியை காட்டுகிறது என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை,

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசுகையில், மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தது அந்த கட்சியின் வலுவான வளர்ச்சியை காட்டுகிறது என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மோடியின் மனது, மூளையில் காங்கிரஸ்

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து மோடி பேசியது தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து மோடி பேசும் போது காங்கிரசை விமர்சித்தது, அந்த கட்சி வலுவாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. 2 தேர்தலில் வெற்றி பெற்ற நிலையிலும் பிரதமரின் மனது, மூளையில் காங்கிரஸ் தான் உள்ளது. ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கடும் சவாலாக மாறி உள்ளது. அந்த கட்சி வளர்ந்து வருகிறது. நீங்கள் (மோடி) ஆட்சி அதிகாரத்தில் 10 ஆண்டுகளாக உள்ளீர்கள். காங்கிரசை மறந்துவிட்டு, உங்கள் வேலையை பற்றி பேசுங்கள்.

அன்பின் வெளிப்பாடு

பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்தும், அங்கு அமைதி திரும்ப அரசு என்ன செய்கிறது என்பது குறித்தும் பேச வேண்டும் என்றுதான் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ராகுல்காந்தியின் 'பிளையிங் கிஸ்சை' நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருங்கள். அது அன்பின் வெளிப்பாடு. ஏன் கோபப்படுகிறீர்கள்?. உங்களால் அன்பு, சமாதானத்தின் செய்தியை கொடுக்க முடியவில்லை என்பதாலா?. வெறுப்பு பேச்சுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி அந்த செய்தியை கொடுப்பது, மிகப்பெரிய விஷயம். 2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மராட்டியத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைக்கும். மராட்டியத்தில் இருந்து மேலும் பல கட்சிகள் மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story