நடைமேம்பாலங்களில் நகரும் படிக்கட்டுகள்- மாநகராட்சி திட்டம்


நடைமேம்பாலங்களில் நகரும் படிக்கட்டுகள்- மாநகராட்சி திட்டம்
x

மும்பையில் நடைமேம்பாலங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் நடைமேம்பாலங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

நகரும் படிக்கட்டு

மும்பையில் ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையிலும், பிரதான சாலைகளை கடந்து செல்லும் வகையிலும் பல்வேறு இடங்களில் நடைமேம்பாலங்கள், ஆகாய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மும்பை மாநகராட்சி 49 நடைமேம்பாலம், ஆகாய நடைபாதைகளை பராமரித்து வருகிறது. இந்தநிலையில் நடைமேம்பாலங்கள், ஆகாய நடைபாதைகளில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

சர்னி ரோடு ரெயில் நிலையம், தாதர் இந்துமாதா, மாகிம் கழிமுகம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட உள்ள நடைமேம்பாலங்களை நகரும் படிக்கட்டுடன் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி செலவு

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், " நடைமேம்பாலங்கள் உயரமாக உள்ளன. இதனால் பொது மக்கள் ஏற முடியாமல் நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விடுகின்றனர். குறிப்பாக முதியவர்களால் நடைமேம்பாலங்களை பயன்படுத்த முடிவதில்லை. பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தாததால் நடைமேம்பாலங்கள் சமூகவிரோதிகளின் கூடாரமாக ஆகிவிடுகின்றன. இதனால் பெண்களும் நடைமேம்பாலங்களை பயன்படுத்துவதில்லை.

எனவே பொது மக்கள் நடைமேம்பாலங்கள், ஆகாய நடைபாதைகளை பயன்படுத்தும் வகையில் அவற்றில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். ஒரு நடைமேம்பாலத்தில் நகரும் படிக்கட்டு அமைக்க ரூ.1 கோடி ஆகும் " என்றார்.

1 More update

Next Story