மும்பை- கோவா நெடுஞ்சாலை பணிகள் டிசம்பருக்குள் முடியும்- நிதின் கட்காரி தகவல்

மும்பை - கோவா நெடுஞ்சாலை பணிகள் டிசம்பருக்குள் முடியும் என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பை,
மும்பை - கோவா நெடுஞ்சாலை பணிகள் டிசம்பருக்குள் முடியும் என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பை- கோவா நெடுஞ்சாலை
மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று பன்வெலில் நடந்த பாலஸ்பே - இந்துபுர் நெடுஞ்சாலை, காங்கிரீட் சாலையாக மாற்றும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
மும்பை - கோவா நெடுஞ்சாலை மராட்டியத்தில் கொங்கன் பகுதியில் மட்டும் 66 சுற்றுலா தலங்கள் வழியாக செல்கிறது. எனவே நெடுஞ்சாலை கொங்கன் பகுதி மேம்பாட்டுக்கு பெரிய உத்வேகமாக இருக்கும். கொங்கன் பகுதியில் விளையக்கூடிய பழங்கள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை விரைவில் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதை இந்த சாலை உறுதி செய்யும்.
டிசம்பருக்குள் முடியும்
2 பகுதியில் ஒப்பந்ததாரர்கள் சாலை போடும் பணியை தாமதப்படுத்திவிட்டனர். தற்போது எல்லா பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டுவிட்டது. நெடுஞ்சாலை மும்பை துறைமுகம், திகி துறைமுகத்துடன் இணைக்கப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
மும்பை - கோவா நெடுஞ்சாலை பணிகள் வரும் டிசம்பருக்குள் முடியும். மோர்பி - கரன்ஜடே இடையே மும்பை துறைமுகம் வழியாக ரூ.13 ஆயிரம் கோடியில் சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மும்பை - கோவா நெடுஞ்சாலை பணிகளை நிதின் கட்காரி ஹெலிகாப்டரில் சென்றபடி ஆய்வு செய்தார்.






