கல்யாணில் சிவசேனா பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்- கும்பலுக்கு வலைவீச்சு


கல்யாணில் சிவசேனா பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்- கும்பலுக்கு வலைவீச்சு
x

கல்யாணில் சிவசேனா கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பர்நாத்,

கல்யாணில் சிவசேனா கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல்

கல்யாண் நகர பிரிவின் சிவசேனா கட்சியின் துணைத்தலைவராக இருந்து வருபவர் ஹர்ஷவர்தன் பலாண்டே. இவர் இன்று கல்யாண் கிழக்கு புனே லிங்க் சாலையில் சென்ற போது கார் ஒன்று அவரை வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய 4 பேர் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பி, அரிவாள் போன்றவைகளால் ஹர்ஷவர்தன் பலாண்டே மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதனை தடுக்க முயன்ற போது அவரது கை, விரல்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அக்கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வலைவீச்சு

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை தாக்கிய கும்பலை பிடிக்க கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசேனா பிரமுகர் தானே மாவட்டம் ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story