நவிமும்பை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு விமான சேவை தொடங்கும் - தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

நவிமும்பை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு விமான சேவை தொடங்கும் - தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 21 July 2023 8:00 PM GMT (Updated: 21 July 2023 8:00 PM GMT)

நவிமும்பை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு விமான சேவை தொடங்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்தார்.

மும்பை,

நவிமும்பை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு விமான சேவை தொடங்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு சேவை

மராட்டியத்தில் உள்ள விமான நிலையங்கள் நிலை தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அது தொடர்பாக சட்டசபையில் நேற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:- நவிமும்பை விமான நிலையம் அடுத்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அங்கு இருந்து விமான சேவை தொடங்கப்படும்.

ரூ.650 கோடியில் முனையம்

நாந்தெட், லாத்தூரில் பணிகள் கிடப்பில் உள்ளன. ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் பாக்கியை செலுத்தவில்லை. இது தொடர்பாக அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு உள்ளோம். அங்கு பணிகள் விரைவுபடுத்தப்படும். முறையான விமான நிலைய நிர்வாகத்துக்காக ஆணையம் அமைக்கப்படும். அதுதொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்கப்படும். ஷீரடியில் ரூ.650 கோடியில் முனையம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story