23 தீவிர குற்ற வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு அதிரடி கைது

23 தீவிர குற்ற வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு கைது செய்யப்பட்டார்.
கட்சிரோலி,
23 தீவிர குற்ற வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். திருந்தி வாழ்வதற்காக சரண் அடையும் திட்டத்தை போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பலர் போலீசுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லை கொடுத்து சவால் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் போலீசாருக்கு சவால் விடுத்து வந்த நக்சலைட்டு சாது என்ற சஞ்சய் நரோடே(வயது31) பற்றி ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட சிறப்பு படை போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் இணைந்து ஹச்போடி வனப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட்டு சஞ்சய் நரோடே சிக்கினார். அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 தீவிர குற்ற வழக்குகள்
நக்சலைட்டு சஞ்சய் நரோடே மீது 23 தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 8 கொலை, 12 என்கவுன்ட்டர், 2 கொள்ளை வழக்குகளும் அடங்கும்.
இவரது தலைக்கு ரூ.2 லட்சத்தை அறிவித்து தேடி வந்த நிலையில் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






